Enable Javscript for better performance
ஸ்மித்துக்கு ஆதரவாக அஸ்வின், கம்பீர் கருத்து- Dinamani

சுடச்சுட

    
    aswin

    'இந்த உலகம் உங்களை கண்ணீர் சிந்தி பார்க்க வேண்டும் என்று விரும்பியது' என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்தார்.
    இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், 'நீங்கள் கண்ணீர் சிந்த வேண்டும் என்று இந்த உலகம் விரும்பியது. நீங்கள் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுவிட்டீர்கள். இனி அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஸ்டீவ் ஸ்மித், பான்கிராஃப்ட் ஆகியோருக்கு இந்த விவகாரத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஆதரவு கிடைக்க வேண்டும். இதிலிருந்து மீண்டு வர டேவிட் வார்னருக்கும் ஆதரவு தேவை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்' என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
    கம்பீர் கருத்து: இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான கௌதம் கம்பீர் ஸ்மித் உள்ளிட்டோருக்கு ஆதரவாக சுட்டுரையில் கருத்து பதிவிட்டுள்ளார்.
    அதில், 'முறைகேடுகள் இல்லாத கிரிக்கெட்டை தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், மூன்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் விதிக்கப்பட்ட தண்டனை சற்று அதிகம் என்றே கருதத் தோன்றுகிறது. வீரர்களுக்கான ஊதிய உயர்வு கேட்டு போராடியதற்காக இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்று தெரியவில்லை. ஏனென்றால், இதற்கு முன்பு இயான் சேப்பலுக்கு இதுபோன்று நேரிட்டிருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai