சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: வார்னருக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு!

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை அவருடைய அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: வார்னருக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணியில் ஸ்மித்துக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பந்தின் தன்மையை மாற்றுவதற்கு ஆஸ்திரேலிய அணியின் பேன்கிராஃப்ட் முயன்றது விடியோவில் பதிவாகியிருந்தது. இந்தச் செயலுக்கு கேப்டன் ஸ்மித்தும் உடந்தையாக இருந்ததை ஒப்புக் கொண்டார். அத்துடன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொள்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் பொறுப்பு இந்திய வீரர் அஜிங்க்ய ரஹானேவுக்கு வழங்கப்பட்டது.

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் விலகினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணி ஒருவருடம் விளையாடத் தடை விதித்ததையடுத்து ஸ்மித், வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது வார்னருக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை அவருடைய அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 2015-ல் ஹைதராபாத் அணிக்குத் தேர்வானார் ஹேல்ஸ். எனினும் ஐபிஎல்-லில் இதுவரை விளையாடியதில்லை. இங்கிலாந்து வீரர்களில் சர்வதேச டி20 சதமெடுத்த ஒரே வீரர், ஹேல்ஸ். 

ஏப்ரல் 9 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் ஆட்டத்தை ஆடவுள்ளது ஹைதராபாத் அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com