Enable Javscript for better performance
அகில இந்திய கூடைப்பந்து போட்டி : தெலுங்கானா, கேரள மின்வாரிய அணிகள் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய கூடைப்பந்து போட்டி : தெலுங்கானா, கேரள மின்வாரிய அணிகள் வெற்றி

    By DIN  |   Published on : 18th May 2018 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    basket_ball

    பெரியகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் மோதிய சென்னை விளையாட்டு விடுதி அணி மற்றும் தெலுங்கானா மாநில அணி.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்றுகளில் தெலுங்கானா மற்றும் திருவனந்தபுரம் மின்வாரிய அணிகள் வெற்றி பெற்றன. 
    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 59 வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள், கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. 3 வது நாளான வியாழக்கிழமை சென்னை விளையாட்டு விடுதி அணியும், தெலுங்கானா மாநில அணியும் மோதின. இதில் தெலுங்கானா அணி 96-92 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
    அதேபோல் மற்றொரு போட்டியில் சென்னை தெற்கு ரயில்வே அணியும், திருவனந்தபுரம் மின்வாரிய அணியும் மோதின. இதில் திருவனந்தபுரம் அணி 71-36 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. 
    வியாழக்கிழமை காலையில் நடைபெற்ற போட்டியினை பிபா கமிஷனர் வி.பி.தனபால் மற்றும் தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் து.சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டி ஏற்பாடுகளை சில்வார்ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பி.சி.சிதம்பரசூரியவேலு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai