Enable Javscript for better performance
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி

    By DIN  |   Published on : 18th May 2018 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hocky

    ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இறுதிச் சுற்றுக்கு நடப்புச் சாம்பியனான இந்தியா தகுதி பெற்றுள்ளது.
    தென் கொரியாவின் டோங்கேசிட்டி நகரில் மகளிர் சாம்பியன் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா ஏற்கெனவே ஜப்பானை 4-1, சீனாவை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 
    மூன்றாவது ஆட்டத்தில் மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. 9 புள்ளிகளுடன் தங்கள் பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியா அடுத்து கொரியாவை சனிக்கிழமை சந்திக்கிறது.
    இறுதிச் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. 
    இந்திய அணிக்கு குர்ஜித் கெளர், வந்தனா கட்டாரியா, லால்ரேமிசியாமி, ஆகியோரும், மலேசியாவுக்கு நுரைனி ரஷீத், ஹனிஸ் ஆகியோர் கோலடித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai