Enable Javscript for better performance
ஆசிய பாட்மிண்டன்: துணைத் தலைவரானார் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய பாட்மிண்டன்: துணைத் தலைவரானார் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா

    By DIN  |   Published on : 18th May 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    piswa

    ஆசிய பாட்மிண்டன் கூட்டமைப்பு துணைத் தலைவராக இந்தியாவின் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    பாங்காக்கில் (பிஏசி) ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவராக இந்திய பாட்மிண்டன் சம்மேளனத் தலைவர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். 
    இதுதொடர்பாக சர்மா கூறியதாவது: என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்த கூட்டமைப்பு உறுப்பினர்கள், பிற நாடுகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய நாடுகள் மத்தியில் சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பாடுபடுவேன். இத்தேர்வு மூலம் பாட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவின் வளர்ந்து வரும் சூழலை நிரூபிக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் பாட்மிண்டன் மேலும் பொலிவு பெறும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai