Enable Javscript for better performance
ஆசிய போட்டியில் மல்யுத்த வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய போட்டியில் மல்யுத்த வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

    By DIN  |   Published on : 18th May 2018 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    keetha

    தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்காததால் கீதா போகட். சத்தியவர்த் கடியன் உள்பட 15 முன்னணி மல்யுத்த வீரர்கள் ஆசிய போட்டிகளில் பங்கேற்தில் சிக்கல் நிலவுகிறது. 
    கடந்த மாதம் கோல்ட்கோஸ்ட்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள், தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். 
    இது தொடர்பாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பூஷண் சரண் சிங் வியாழக்கிழமை கூறியதாவது:
    ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் ஜாகர்த்தாவில் நடக்கிறது. இதற்காக சம்மேளனம் சார்பில் மகளிர் பயிற்சி முகாம் லக்னெளவிலும், ஆடவர் பயிற்சி முகாம் பானிபட்டிலும் நடத்தப்படுகிறது. போகட் சகோதரிகள் என அழைக்கப்படும் கீதா, பபிதா, ரிது, சங்கீதா, உள்பட 15 பேர் முகாம்களில் பங்கேற்கவில்லை. பலமுறை சம்மேளனம் சார்பில் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் அவர்கள் முகாமில் பங்கேற்கவில்லை. இதற்காக அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களான சுஷில்குமார், சாக்ஷி மாலிக் ஆகியோர் முகாமில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதி பெற்றனர். 
    கீதா, பபிதா உள்ளிட்டோர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இது விதிமீறலாகும். இதனால் தான் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் முகாமில் பங்கேற்காத வீரர்கள் உரிய விளக்கம் அளித்தால் பரிசீலிக்கப்படும் என்றார். 
    இதனால் ஆசிய போட்டிகளுக்கான தேர்வுப் போட்டிகளிலும் 15 பேரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனக்கு காயம் ஏற்பட்டதால் முகாமில் பங்கேற்க முடியவில்லை என பபிதா தெரிவித்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai