Enable Javscript for better performance
ஐபிஎல்: தில்லி டேர் டேவில்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஐபிஎல்: தில்லி டேர் டேவில்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள்

    By DIN  |   Published on : 18th May 2018 10:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dd

    ஐபிஎல் போட்டியில் 52 வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி டேர் டேவில்ஸ் அணிகளுக்குகிடையேயான போட்டி தில்லியில் நடைபெற்றது.
    போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
    இதனையடுத்து களத்தில் இறங்கிய தில்லி டேர் டேவில்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது.
    அணியில் அதிக பட்சமாக  ப்ரித்வி ஷா 17, ஷ்ரேயஸ் ஐயர் 19, ரிஷாப் பந்த்  38, க்ளென் மேக்ஸ்வெல்  5, விஜய் ஷங்கர்  36, ஹர்ஷல் படேல் 36 ரன்களை எடுத்தனர்.

    ஹர்ஷல் படேல், விஜய் ஷங்கர் இருவரும் கடைசி  ஓவரில் 26 ரன்களை  குவித்தனர்.
    இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 163 ரன்களை இலக்காக கொண்டு களத்தில் இறங்க உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai