Enable Javscript for better performance
ஐபிஎல்:4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது தில்லி டேர் டேவில்ஸ்- Dinamani

சுடச்சுட

    

    ஐபிஎல்: 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது தில்லி டேர் டேவில்ஸ்

    By DIN  |   Published on : 18th May 2018 11:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ddi

    ஐபிஎல் போட்டியில் 52 வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி டேர் டேவில்ஸ் அணிகளுக்குகிடையே போட்டி டெல்லியில் நடைபெற்றது.
    போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
    இதனையடுத்து களத்தில் இறங்கிய தில்லி டேர் டேவில்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது.
    அணியில் அதிக பட்சமாக  ப்ரித்வி ஷா 17, ஷ்ரேயஸ் ஐயர் 19, ரிஷாப் பந்த்  38, க்ளென் மேக்ஸ்வெல்  5, விஜய் ஷங்கர்  36, ஹர்ஷல் படேல் 36 ரன்களை எடுத்தனர்.
    இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயக்கப்பட்டது.

    இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்து இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.
    அணியில் அதிக பட்சமாக ஷேன் வாட்சன் 14, 4 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் அம்பத்தி ராயுடு 50 ரன்களும், சுரேஷ் ரெய்னா 15, மகேந்திர சிங் தோனி 17,  ரவீந்திர ஜடேஜா 26 ரன்களை எடுத்தனர்.
    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸை 34  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி டேர் டேவில்ஸ்  வெற்றி பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai