Enable Javscript for better performance
டெஸ்ட் கிரிக்கெட்: பூவா தலையா டாஸ் போடும் முறை பரிசீலிக்க ஐசிசி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    டெஸ்ட் கிரிக்கெட்: பூவா தலையா டாஸ் போடும் முறை பரிசீலிக்க ஐசிசி திட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டெஸ்ட் கிரிக்கெட்டில் பூவா தலை டாஸ் போடும் முறையை கைவிடுவதா என்பது தொடர்பாக பரிசீலிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டமிட்டுள்ளது.
    டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பூவா, தலையா டாஸ் போடும் முறையை கைவிடுவது குறித்து பரிசீலிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.
    வரும் 2019-இல் இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஆஸி. அணியின் ஆஷஸ் தொடரின் போடு டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் டாஸ் முறையை கைவிடுவது குறித்து ஐசிசி விவாதிக்க முடிவு செய்துள்ளது. டெஸ்ட் போட்டியை நடத்தும் நாட்டின் சாதகமான சூழலை மாற்றும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    போட்டியை நடத்தும் நாடுகள் தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பிட்ச் எனப்படும் ஆடுகளங்களை மாற்றி அமைப்பதாக புகார்கள், விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் விளையாட வரும் எதிரணியின் கேப்டனுக்கு டாஸ் போடும் வாய்ப்பை தர வேண்டும் என ஐசிசி குழு வட்டாரங்கள் தெரிவித்தன. ஐசிசி குழுவில் அனில்கும்ப்ளே, ஆண்ட்ரு ஸ்டராஸ், மஹேலா ஜெயவர்த்தன, ராகுல் திராவிட், டிம் மே, நியூஸி கிரிக்கெட் வாரிய நிர்வாகி டேவிட் ஓயிட், நடுவர் ரிச்சர்ட், ஐசிசி ஆட்ட நடுவர்கள் தலைவர் ரஞ்சன் மடுகல்லே, ஷான் போலாக், கிளாரே கானார் ஆகியோர் உள்ளனர். வரும் 28, 29 தேதிகளில் மும்பையில் நடக்கவுள்ள ஐசிசி குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
    இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் டாஸ் போடும் முறை மற்றொரு வாய்ப்பாக தான் வைக்கப்பட்டுள்ளது. தரமான ஆடுகளங்களை அமைப்பதே சிறந்த தீர்வும். டாஸ் போடும் முறையை கைவிட்டால், போட்டி நடத்தும் நாடும் ஆடுகளங்களை தங்கள் விருப்பத்துக்கு அமைக்கும் வாய்ப்பு குறைவு என ஆஸி முன்னாள் பயிற்சியாளர் லேமன் தெரிவித்துள்ளார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai