Enable Javscript for better performance
பெண்கள் டி 20 போட்டிக்கான அணிகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களுக்கு முன்பு நடக்கவுள்ள பெண்களுக்கான டி 20 போட்டிக்கான அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. 
    ஆடவர் அணிக்கு ஐபிஎல் டி 20 போட்டிகள் நடத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது மகளிர் பிரிவிலும் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மும்பையில் வரும் 22-ஆம் தேதி தொடங்குகின்றன.
    அதற்கு முன்னதகா மகளிர் காட்சி டி 20 போட்டி நடத்தப்படுகிறது. இதில் இந்திய மகளிர் அணியினர் மற்றும் இங்கிலாந்து, ஆஸி, நியூஸி அணிகளைச் சேர்ந்த 10 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் டிரப்லைசர்ஸ் மற்றும் ஐபிஎல் சூப்பர்நோவாஸ் என 2 அணிகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது. 
    டிரப்லைசர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தானாவும், சூப்பர் நோவாஸுக்கு ஹர்மன்பிரீத் கெளரும் கேப்டன்களாக செயல்படுவர். 
    இரு அணிகளிலும் 13 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai