Enable Javscript for better performance
போராடியும் ஹைதராபாத் தோல்வி- Dinamani

சுடச்சுட

    
    ipl

    *டி வில்லியர்ஸ், மொயின் அலி அதிரடி

    *வீணாகியது வில்லியம்ஸன் போராட்டம்
    ஹைதராபாத் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது பெங்களூரு.
    ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ், ஹைதராபாத் அணிகள் இடையிலான ஐபிஎல் 51-வது ஆட்டம் வியாழக்கிழமை இரவு பெங்களூருவில் நடைபெற்றது. 
    முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி தரப்பில் பார்த்திவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பார்த்திவ் பட்டேல் 1 ரன்னிலும், கேப்டன் கோலி 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
    பின்னர் மொயின் அலி-வில்லியர்ஸ் இணை அதிரடியாக ஆடியது. 14-வது ஓவர் வரை இருவரும் அடித்து ஆடிக் கொண்டிருந்தனர். டி வில்லியர்ஸ் 69, மொயின் அலி 65, மந்திப் சிங் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 
    இறுதியில் கிராண்ட்ஹோம்-சர்ஃபராஸ் இணை கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடியது. கிராண்ட்ஹோம் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் 22 ரன்களுடனும், செளதி 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 218 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.
    ஹைதராபாத் தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டையும், கெளல் 2 விக்கெட்டையும், சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
    219 ரன்கள் வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி சார்பில் ஷிகர் தவன்-அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
    இருவரும் துவக்கம் முதலே அடித்து ஆடினர். 5.1 ஓவரில் ஷிகர் தவன் 18 ரன்களுக்கு சஹால் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 37 ரன்கள் எடுத்த ஹேல்ஸ் ஆட்டமிழந்தார்.
    கேப்டன் கேன் வில்லியம்ஸன்-மணிஷ் பாண்டே இணை அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. 6 பந்துகளில் 20 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் 81 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்ஸன் சிராஜ் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 
    மணிஷ்பாண்டே 61 ரன்கள், ஹூடா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
    20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்து ஹைதராபாத் தோல்வியைத் தழுவியது. பெங்களூரு தரப்பில் சஹால், சிராஜ், மொயின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இன்றைய ஆட்டம்
    தில்லி-சென்னை
    இடம்: தில்லி, நேரம்: இரவு 8.00.
    நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.


    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai