Enable Javscript for better performance
யுரோப்பா லீக் கால்பந்து போட்டி: அதெலெட்டிக்கோ மாட்ரிட் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    யுரோப்பா லீக் கால்பந்து போட்டி: அதெலெட்டிக்கோ மாட்ரிட் சாம்பியன்

    By DIN  |   Published on : 18th May 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    food_ball

    யுரோப்பா கால்பந்து லீக் போட்டி சாம்பியன் பட்டம் வென்ற அதெலெட்டிக்கோ மாட்ரிட் அணி வீரர்கள்.

    லியானில் நடைபெற்ற யுரோப்பா லீக் கால்பந்து போட்டியில் அதெலெட்டிகோ மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது.
    யூஇஎஃப்ஏ சார்பில் யுரோப்பா லீக் கால்பந்துபோட்டிகள் கிளப் அணிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. பிரான்சின் ஒலிம்பிக் மார்செய்ல் அணியும்-ஸ்பெயினின் அதெலெட்டிகோ மாட்ரிட் அதெலெட்டிகோ மாட்ரிட் அணியும் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் அதெலெட்டிக்கோ அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 
    அதெலெட்டிக்கோ அணியின் அன்டோனி கிரைஸ்மேன் 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த சீசனில் அவர் 29 கோல்களை அடித்துள்ளார். கடந்த 2010, 2012-இலும் யுரோப்பா லீக் சாம்பியன் பட்டத்தை அதெலெட்டிக்கோ அணி வென்றிருந்தது. எனினும் 2014, 2016 சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் யுரோப்பா லீக் பட்டத்தை வென்றுள்ளது.
    இதன் மூலம் ஐரோப்பிய கால்பந்து அமைப்பில் ஸ்பெயின் நாட்டு கால்பந்து கிளப்புகளின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai