Enable Javscript for better performance
2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : பயிற்சியாளர்கள் 2 டேப்லட்டுகள் பயன்படுத்த அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : பயிற்சியாளர்கள் 2 டேப்லட்டுகள் பயன்படுத்த அனுமதி

    By DIN  |   Published on : 18th May 2018 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரஷியாவில் நடைபெறவுள்ள 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வீரர்களின் ஆடுதிறன், நிலைமை குறித்து அறிய ஏதுவாக டேப்லட்டுகளை பயன்படுத்த பிஃபிபா அனுமதித்துள்ளது.
    வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை ரஷியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. இதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த பிஃபா திட்டமிட்டுள்ளது.
    போட்டிகள் எந்த கோளாறும் இன்றி நடுவர்கள் முடிவு, கோல்களை தீர்மானிப்பதில் பிரச்னை போன்றவை ஏற்படாமல் தடுக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வார் எனப்படும் விடியோ உதவி நடுவர் தொழில்நுட்பம் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.
    அதே நேரத்தில் ஆட்டங்களின் போது, 32 நாடுகளும் தங்கள் வீரர்களின் செயல்திறன், ஆடும் தன்மை, விடியோ காட்சிகள் குறித்து ஆய்வு செய்ய ஏதுவாக பயிற்சியாளர்கள் 2 டேப்லட்டுகளை இயக்க பிஃபா அனுமதி தந்துள்ளது.
    அரங்கில் அமர்ந்திருக்கும் தொழில்நுட்ப நிபுணரிடம் ஒரு டேப்லட்டும், மைதானத்தில் அமர்ந்திருக்கும் பயிற்சியாளர் வசம் மற்றொரு டேப்லட்டும் இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் ஆட்டத்தின் போதும், இடைவேளையின் போதும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் போதும் இவை பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai