களத்துக்கு திரும்புகிறார் டேவிட் வார்னர்!

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் 1 ஆண்டு தடை செய்யப்பட்ட டேவிட் வார்னர் தற்போது சிட்னி கிளப் அணிக்காககளமிறங்குகிறார்.
களத்துக்கு திரும்புகிறார் டேவிட் வார்னர்!

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் 1 ஆண்டு தடை செய்யப்பட்ட டேவிட் வார்னர் தற்போது சிட்னி கிளப் அணிக்காக களமிறங்குகிறார். 

கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திட்டமிட்டே பந்தை சேதப்படுத்தியதற்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தலா 1 ஆண்டு தடை விதித்தது. களத்தில் வைத்து பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, 3 வீரர்களும் இந்த செயலுக்கு மன்னிப்புக் கோரி தண்டனையை ஏற்று தற்போது தடைக்காலத்தில் உள்ளனர். இந்நிலையில், சிட்னி கிளப் அணியான ராண்ட்விக் பீட்டர்ஷாம் அணிக்காக டேவிட் வார்னர் விளையாட இருக்கிறார்.  

இந்த செய்தியை முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் அந்த கிளப்பின் தலைவருமான மைக் விட்னே உறுதி செய்தார். இதன்மூலம், வார்னர் குறைந்தபட்சம் 3 போட்டிகளிலாவது அந்த அணிக்காக விளையாடுவார் என்று தெரிகிறது.

முன்னதாக, பான்கிராஃப்ட் நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அவருடைய கிளப்பான வில்லெட்டன் அணிக்கு விளையாட அனுமதி பெற்றார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்த தண்டனை சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி மாநில கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்தும். அதனால், தடைக்காலத்தின் போது அவர்கள் கிரேட் தர போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com