கோலியின் கருத்து முட்டாள்தனமானது: பிசிசிஐ 

இந்திய வீரர்களை விரும்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் என்ற கோலியின் கருத்து முட்டாள்தனமானது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
கோலியின் கருத்து முட்டாள்தனமானது: பிசிசிஐ 

இந்திய வீரர்களை விரும்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் என்ற கோலியின் கருத்து முட்டாள்தனமானது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மற்றும் நிர்வாகக் குழு இடையிலான ஆலோசனை கூட்டம் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில், பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய், டயானா எடுல்ஜி, தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஐபிஎல் சிஓஓ ஹேமங்க் அமின், பொது மேலாளர் சபா கரிம், விராட் கோலி, ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ரஹானே மற்றும் தலைமைத் தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் நிகழ்ந்தது குறித்து அதில் பங்கேற்ற பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துள்ளார். அதன்படி, 

இந்திய ஊடகங்கள் எப்போதுமே நமது வீரர்களை விமரிசிப்பார்கள் என்று ரவி சாஸ்திரி தொடங்கியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் மிகச் சிறந்த அணிகளில் இது ஒன்று என்று தெரிவித்திருக்கிறார். 

ரவி சாஸ்திரி இப்படி இந்த அணியின் பெருமையை குறித்து கூறுகையில், நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் அவரை நிறுத்தினார். தொடர்ந்து, ரவி சாஸ்திரியிடம் அவர் கூறுகையில், இந்த கூட்டத்தின் மையப் புள்ளியான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவோம். மக்களே நீதியரசர்களாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, இந்திய வீரர்களை விரும்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கோலி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டத்தில் இது குறித்து பேசுகையில், 

"இது மிகவும் முட்டாள்தனமாக கருத்து. அவர் கவனமாக இருந்திருக்கவேண்டும். அவர் சம்பாதிக்கும் பணம், இந்தப் போட்டிக்காக இந்திய ரசிகர்கள் முதலீடு செய்துள்ளது என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். 

எனினும், இந்த கருத்து அவருடைய தனிப்பட்ட நிகழ்விலோ அல்லது வணிக நோக்கத்திலோ பேசியுள்ளார். அவர் இதற்காக பிசிசிஐ-ஐ பயன்படுத்தவில்லை. அதனால், இது ஒரு விஷயம் கிடையாது" என்று பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.  

மேலும் இந்தக் கூட்டத்தில், நீங்கள் கேட்டது அனைத்துமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் உங்களிடம் இருந்து பிசிசிஐ சிறப்பான செயல்பாடுகளை எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்று பிசிசிஐ சார்பில் வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com