உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அறிவிப்பு

ஒடிஸாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அறிவிப்பு

ஒடிஸாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 மன்ப்ரீத் சிங் தலைமையில் 18 பேர் கொண்ட அணியை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சார்பில் புவனேசுவரத்தில் உலகக் கோப்பை போட்டிகள் நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடக்கிறது.
 உலக தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ள இந்திய அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் மேற்பார்வையில் மீண்டும் உலக கோப்பை பட்டத்தை வெல்லும் துடிப்புடன் உள்ளது.
 மூத்த வீரர்கள் ரூபிந்தர்பால் சிங், எஸ்.வி.சுனில் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. ஸ்ட்ரைக்கர் சுனில் அண்மையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
 இந்திய அணி விவரம்
 கோல்கீப்பர்கள்: பிஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷ்ணபகதூர் பதக்,
 டிபண்டர்கள்:பிரேந்திர லக்ரா, அமித் ரோஹிதாஸ், சுரேந்தர்குமார், கோத்தஜித் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், வருண்குமார் சிறந்த தற்காப்பு அரணை உருவாக்குவர்.
 மீட்பீல்டர்கள்: மன்ப்ரீத் சிங் (கேப்டன்), செங்கலரேசேனா, நிலகந்தா சர்மா, ஹார்திங் சிங், சுமித்.
 பார்வர்ட்கள்: அக்ஷதீப் சிங், மன்தீப் சிங், தில்ப்ரீத் சிங், லஜித் உபாத்யாய் சிம்ரஞ்சித் சிங்.
 இந்திய அணி போட்டி துவக்க நாளில் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. குரூப் சி பிரிவில் பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா, கனடா, ஆகியவற்றோடு இந்தியா இடம் பெற்றுள்து. பிரிவில் முதலிடம் பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.
 இதுதொடர்பாக பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறியதாவது:
 மிகவும் கனமான மனதுடன் தான் 34 சிறந்த வீரர்கள் பட்டியலில் இருந்து 18 பேர் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பையில் வெற்றி பெறுவதே எங்கள் நோக்கம், இந்த வீரர்கள் அனைவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். எனினும் 34 வீரர்களும் தொடர்ந்து 23-ஆம்தேதி வரை புவனேசுவரத்தில் பயிற்சி பெற்று வருவர்.
 பாக். அணி பங்கேற்பில் சிக்கல்: நிதி தட்டுப்பாட்டால் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கியில் பாக். அணி பங்கேற்பதில் சிக்கல் ஏள்பட்டுள்ளது.
 ஏற்கெனவே பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் நிதி தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது. இந்நிலையில் ஹாக்கி அணி இந்தியா செல்ல நிதியுதவி செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (பிசிபியிடம்) கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பிசிபி கைவிரித்து விட்டது.
 ஏற்கெனவே கடந்த 2000-இல் பிஎச்எஃப்புக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை திருப்பித் தரவில்லை. இதனால் தற்போது கடனுதவி தர முடியாது என பிசிபி தலைவர் ஈஷான் மணி தெரிவித்துள்ளார்.
 8 மில்லியன் பாகிஸ்தான் ரூபாயை விடுவிக்குமறு நேரடியாக பிரதமர் அலுவலகத்துக்கும் கோரிக்கை கடிதத்தை பாக். ஹாக்கி சம்மேளனம் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com