காயத்தில் இருந்து மீண்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுந்த ஜோகோவிச்

கடுமையான முழங்கை காயத்தில் இருந்து மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்த ஜோகோவிச் மீண்டும் உலகின் நம்பர் ஒன் வீரர் ஆகியுள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுந்த ஜோகோவிச்

கடுமையான முழங்கை காயத்தில் இருந்து மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்த ஜோகோவிச் மீண்டும் உலகின் நம்பர் ஒன் வீரர் ஆகியுள்ளார்.
 டென்னிஸ் விளையாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவக் ஜோகோவிச். ஆண்டி முர்ரே போன்றவர்களே ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக உலகின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தை இந்த வீரர்களே மாறி மாறி அடைந்து வந்தனர். இவர்கள் நான்கு பேரும் பிக் ஃபோர் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
 நான்கு வீரர்களுமே வெவ்வேறு காலகட்டங்களில் காயத்தால் பாதிக்கப்பட்டனர்.
 ஆன்டி முர்ரே
 பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து பல மாதங்கள் ஆடாமல் இருந்தார். நிகழாண்டு மீண்டும் சில ஏடிபி போட்டிகள், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆட முயன்றார். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால் மீண்டும் மைதானத்தில் களமிறங்குவதை தவிர்த்து விட்டார். இவர் 2009-இல் உலகின் இரண்டாம் நிலை வீரர் ஆனார். 2012-இல் ஒலிம்பிக் தங்கம், யுஎஸ் ஓபன் சாம்பின், 2013-இல் விம்பிள்டன் சாம்பியன், காயம், 2015-இல் டேவிஸ் கோப்பை சாம்பியன், உலகின் இரண்டாம் நிலை வீரர், 2016-இல் விம்பிள்டன் சாம்பியன், ஒலிம்பிக் தங்கம், மீண்டும் உலகின் நம்பர் ஒன் வீரர், 2017-காயங்கள், நம்பர் ஒன்வீரர் அந்தஸ்தை இழந்தார். தற்போதைய ஏடிபி நிலவரப்படி 263 இடத்தில் உள்ளார்.
 ரோஜர் பெடரர்
 தற்போது உலகின் மூன்றாம் நிலை வீரராக உள்ளார் பெடரர். இவர் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அதிக முறை பட்டம் வென்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார். 237 தொடர் வாரங்கள் உள்பட 310 வாரங்கள் உலகின் நம்பர் ஒன்வீரர் அந்தஸ்தை தக்க வைத்திருந்தார். கடந்த 2002 முதல் 2016 வரை தொடர்ந்து முதல்நிலை வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். காயம் காரணமாக முதல் 10 இடங்களில் இருந்து தள்ளப்பட்ட பெடரர், 2017-இல் மீண்டும் இடம் பெற்றார். 8 விம்பிள்டன், 6 ஆஸி. ஓபன், 5 யுஎஸ் ஓபன், 1 பிரெஞ்சு ஓபன் பட்டங்களை வென்றுள்ளார். தற்போது 37 வயதான நிலையிலும் இளம் வீரர்களுக்கு சவால் விட்டு வருகிறார்.
 ரபேல் நடால்
 அண்மையில் உலகின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தை ஜோகோவிச்சிடம் பறிகொடுத்தார். ஸ்பெயினைச் சேர்ந்த நடால் களிமண் தரையின் மன்னன் ஆவார். பிரெஞ்சு ஓபனில் முடிசூடா மன்னனாக திகழ்கிறார். மொத்தம் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலகின் இரண்டாவது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். 11 முறை பிரெஞ்சு ஓபன், 2 முறை விம்பிள்டன், மூன்று முறை யுஎஸ் ஓபன், ஒரு முறை ஆஸி.ஓபன், 2 ஒலிம்பிக் தங்கம், 33 ஏடிபி பட்டங்கள், 196 வாரங்கள் உலகின் நம்பர் ஓன் வீரர் சாதனையை செய்துள்ளார். 32 வயதான இவரும் நிகழாண்டு கால்மூட்டில் காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.
 நோவக் ஜோகோவிச்
 செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 6 ஆஸி. ஓபன், 4 விம்பிள்டன், 3 யுஎஸ் ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன் பட்டங்கள், 32 ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டங்களை வென்ற அவர் தொடர்ந்து 200 வாரங்கள் உலகின் நம்பர் ஒன் வீரர் நிலையில் இருந்துள்ளார். ஓரே நேரத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற மூன்றாவது நபர் ஜோகோவிச் ஆவார். 2017-ஆம் ஆண்டு அவருக்கு சோதனையான ஆண்டாக அமைந்தது. முழங்கை காயம் காரணமாக ஓராண்டுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் பல்வேறு பெரிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. கடந்த ஜனவரியில் அறுவை சிகிச்சைக்கு பின் ஓரளவு குணமடைந்த ஜோகோவிச், மார்ச் மாதம் மீண்டும் களமிறங்கினார். எனினும் பெரிய வெற்றிகளை குவிக்க முடியவில்லை.
 22-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட அவர் விம்பிள்டனில் யுஎஸ் ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்று மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார்.
 காயத்தில் இருந்துகுணமடைந்து தற்போது மீண்டும் உலகின் நம்பர் ஓன் வீரர் அந்தஸ்தைப் பெற்றுள்ளார் ஜோகோவிச்.
 

-பா.சுஜித்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com