சுடச்சுட

  

  இந்திய ஒருநாள் அணியில் இனி நீக்கங்கள், ஓய்வுகள் இருக்காது: உலகக் கோப்பைக்குத் தயாராவது குறித்து ரவி சாஸ்திரி

  By எழில்  |   Published on : 16th November 2018 12:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ravi_shastri8181

   

  ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் நியூஸிலாந்தில் 5 ஒருநாள் ஆட்டங்கள். இதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவில் நடைபெறவுள்ள 5 ஒருநாள் ஆட்டங்கள்.

  உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி 13 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதையடுத்து இனிமேல் இந்திய ஒருநாள் அணியில் மாற்றங்கள், ஓய்வுகள் இருக்காது என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். வரும் 21-ம் தேதி தொடங்கும் 4 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை ஆஸி.புறப்பட்டுச் சென்றது. சுற்றுப்பயணத்துக்கு முன்பு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா மொத்தம் 13 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே ஆடும் வாய்ப்புள்ளது. ஆஸி.யில் 3 ஆட்டங்களும், நியூஸியில் 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் இந்தியா பங்கேற்கிறது. பின்னர் பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸி. அணி பங்கேற்கிறது.  உலகக் கோப்பையில் ஆடவுள்ள 15 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவோம். இனிமேல் நீக்கங்கள் அணியில் இருக்காது. ஓய்வுகள் இருக்காது. ஓர் அணியாக விளையாடவேண்டிய நேரமிது. காயங்கள் எதுவும் அதிகம் ஏற்படாது என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

  இந்த ஆண்டு இந்திய அணி விளையாடிய 20 ஒருநாள் ஆட்டங்களில் 25 வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். ஜிம்பாப்வே, இலங்கை ஆகிய அணிகள் மட்டுமே இந்தியாவை விட இந்த ஆண்டு அதிக வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. மிகவும் சிக்கலாக இருந்த 4-ம் நிலைக்கு ராயுடு தேர்வாகியுள்ளதால் இந்திய அணியில் இனிமேலும் மாற்றங்கள், புதிய முயற்சிகள் எதுவும் இருக்கப்போவதில்லை. காயங்களிலிருந்து பாண்டியாவும் ஜாதவும் மீண்டும் அணியில் தொடர்ந்து இடம்பெறுகிறபோது உலகக் கோப்பையில் விளையாடுகிற இந்திய அணியை இந்த 13 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாகக் காணமுடியும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai