ஹைதராபாத் டெஸ்ட்: இந்திய பந்துவீச்சை சமாளித்த மேற்கிந்திய தீவுகள் 295/7

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் திணறி விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி பின்னர் நிலைத்து ஆடி ரன்களை குவித்தது. ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு
ஹைதராபாத் டெஸ்ட்: இந்திய பந்துவீச்சை சமாளித்த மேற்கிந்திய தீவுகள் 295/7

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் திணறி விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி பின்னர் நிலைத்து ஆடி ரன்களை குவித்தது. ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்களை எடுத்திருந்தது. ரோஸ்டான் சேஸ் ஆட்டமிழக்காமல் 98 ரன்களையும், கேப்டன் ஹோல்டர் 52 ரன்களையும் விளாசி ஸ்கோர் உயரச் செய்தனர்.
 ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது
 கிரெய்க் பிராத்வொயிட், கீய்ரன் பொவல் ஆகியோர் தொடக்க வீர்ரகளாக களமிறங்கினர். எனினும் இருவரும் நிலைத்து ஆடவில்லை. பிராத்வொயிட் 14, பொவல் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர், ஷேய் ஹோப் 5 பவுண்டரியுடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷிம்ரன் பெட்மயர் 12, சுனில் அம்ப்ரிஸ் 18 ரன்களிலும் வீழ்ந்தனர். அப்போது 38.5 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 113 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.
 பின்னர் ரோஸ்டான் சேஸ், ஷேன் டெüரிச் இணைந்து ஆடினர். டெüரிச் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ரோஸ்டான்-கேப்டன் ஜேஸன் ஹோல்டர் இணை இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடி ரன்களை சேர்த்தது. 6 பவுண்டரியுடன் 92 பந்துகளில் 52 ரன்களை எடுத்த ஹோல்டர், உமேஷ் பந்துவீச்சில் வெளியேறினார்.
 அப்போது ஆட்ட நேர முடிவில் 95 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து மேற்கிந்திய தீவுகள் 295 ரன்களை எடுத்திருந்தது.
 ரோஸ்டான் சேஸ் 98 ரன்களுடனும், தேவேந்திர பிஷு 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
 குல்தீப், உமேஷ் அபாரம்
 இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 74 ரன்களை விட்டுத்தந்து 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 83 ரன்களை விட்டுத்தந்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
 தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி நிலைகுலைந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், உணவு இடைவேளுக்கு பின் ஹோல்டர்-ரோஸ்டான் இணை நிலைத்து நின்று ஆடி 7-ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்தது.
 முதல் டெஸ்டில் குறைந்த ரன்களில் சுருண்டது போல் அல்லாமல் இந்த டெஸ்டில் ரன்களை குவிக்க மேற்கீந்தி தீவுகள் போராடி வருகிறது.
 சர்துல் தாக்கூர் வெளியேறியதால் பாதிப்பு
 அந்த அணியின் மிடில் ஆர்டர், கடை நிலை பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாக்கூர் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். இதனால் இந்தியா 4 பந்துவீச்சாளர்களோடு பந்துவீசும் நிலைக்கு தள்ளப்பட்டது. மூத்த பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சு எடுபடவில்லை.
 100 விக்கெட் வீழ்த்தி குல்தீப் சாதனை:
 மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் சுனில் அம்ப்ரீஸ் விக்கெட்டை வீழ்த்தியதின் மூலம் டெஸ்ட், ஒரு நாள் ஆட்டங்களைச் சேர்ந்து 100-ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். டெஸ்ட்களில் 19 விக்கெட்டுகளையும், ஒரு நாள் ஆட்டங்களில் 58, டி20 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் முதல் டெஸ்டில் பிரித்வி ஷா, இரண்டாவது டெஸ்டில் சர்துல் தாக்கூர் என இரண்டு புதிய வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com