யூத் ஒலிம்பிக்: பாட்மிண்டனில் வெள்ளி வென்றார் லக்ஷயா

ஆர்ஜென்டீனாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டி பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் லக்ஷயா சென்.
யூத் ஒலிம்பிக்: பாட்மிண்டனில் வெள்ளி வென்றார் லக்ஷயா

ஆர்ஜென்டீனாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டி பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் லக்ஷயா சென்.
 ஒற்றையர் இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திரம் லக்ஷயா சென் 15-21, 19-21 என நேர் செட்களில் சீன வீரர் லீ ஷிபெங்கிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 முதல் கேமில் சீன வீரர் 14-5 என முன்னிலை பெற்ற போதும், லக்ஷயா சென் போராடி 13-16 எனக்குறைத்தார். ஆனால் அதை தக்க வைக்கமுடியவில்லை. இரண்டாவது கேமிலும் சீன வீரர் முன்னிலையை தொடர்ந்து சீராக பராமரித்து வெற்றி பெற்றார்.
 ஆசிய ஜூனியர் சாம்பியன் ஆன லக்ஷயா சென் (17) கடந்த ஜூலையில் தான் ஆசிய போட்டி காலிறுதியில் லீ ஷிபெங்கை வீழ்த்தி இருந்தார். தற்போது அதற்கு சீன வீரர் பழிதீர்த்துக் கொண்டார். பாட்மிண்டனில் வளர்ந்து வரும் ஆடவர் நட்சத்திரமாக லக்ஷயா சென் திகழ்கிறார்.
 யூத் ஒலிம்பிக்கில் 3 தங்கத்தோடு இது இந்தியா பெறும் 4-ஆவது வெள்ளியாகும்.
 மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா
 யூத் ஒலிம்பிக் ஹாக்கி 5 போட்டி மகளிர் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
 காலிறுதி ஆட்டத்தில் போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. லால்ரேமிசியாமி, கேப்டன் சலிமா டேட், பல்ஜீத் கெüர் உள்ளிட்டோர் கோலடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். முதல் பாதியில் போலந்து சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்தினாலும், பின்னர் இந்தியா வசம் ஆட்டம் கட்டுக்குள் வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com