ஹைதராபாத் டெஸ்ட்: மே. இ.தீவுகள் 311, இந்தியா 308/4

இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஹைதராபாத் டெஸ்ட்: மே. இ.தீவுகள் 311, இந்தியா 308/4

இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் வீரர் ரோஸ்டான் சேஸ் 106 ரன்களுடன் சதமடித்தார். பின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்திருந்தது. பிரித்வி ஷா 70 ரன்களை எடுத்தார். ரஹானே 75, ரிஷப் பந்த் 85 ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ், 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 முதல் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 295/7 ரன்களை எடுத்திருந்தது. சனிக்கிழமை ஆட்டம் தொடங்கியவுடன் உமேஷ் யாதவ் பந்துவீச்சை அந்த அணியால் சமாளிக்க முடியவில்லை.
 இளம் இந்திய வீரர்கள் எழுச்சி: பின்னர் இந்திய அணி சார்பில் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஹோல்டர் பந்துவீச்சில் ராகுல் போல்டாகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அபாரமாக ஆடி 1 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 70 ரன்களை எடுத்த பிரித்வி ஷா, புஜாரா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி 45 ரன்களில், ஹோல்டர் பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார்.
 பின்னர் ரஹானே-ரிஷப் பந்த் இணை சிறப்பாக மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. 5-ஆவது விக்கெட்டுக்கு இந்த இணை 146 ரன்களை சேர்த்தது. ஆட்ட நேர முடிவில் 81 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்தியா 308 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே 75, ரிஷப் பந்த் 85 (120, 10, 2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஷேனான் கேப்ரியேல் 1-73, ஹோல்டர் 2-45, ஜோமல் 1-76 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங்கில் காணப்பட்ட குறைபாடுகள் தற்போது ரஹானே, ரிஷப் பந்த் ஆட்டம் மூலம் ஓரளவு சரியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 ரோஸ்டான் 4-ஆவது சதம்
 1 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 189 பந்துகளில் 106 ரன்களை எடுத்த ரோஸ்டான் சேஸ், தேவேந்திர பிஷு 2, ஷேனான் கேப்ரியேல் 0 ஆகியோர் உமேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 101.4 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 உமேஷ் 6/88 அபாரம்
 இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசி 88 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 3-85, அஸ்வின் 1-49 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதற்கு முன்பு கடந்த 2012-இல் பெர்த் டெஸ்டில் உமேஷ் 5/93 விக்கெட்டை வீழ்த்தி
 இருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com