மே.இ.தீவுகள், ஆஸி. தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு: தோனி நீக்கம்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர்களில் இருந்து இந்திய அணியன் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மே.இ.தீவுகள், ஆஸி. தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு: தோனி நீக்கம்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர்களில் இருந்து இந்திய அணியன் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. எனவே ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் நவம்பர் 4-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இரண்டாவது டி20 ஆட்டம் நவம்பர் 6-ஆம் தேதி லக்னெளவிலும், மூன்றாவது டி20 ஆட்டம் நவம்பர் 11-ஆம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது.

இந்நிலையில், மே.இ. தீவுகள் டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன் விவரம் பின்வருமாறு:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஷிரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), க்ருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், ஷபாஸ் நதீம்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. 

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், பிருத்வி ஷா, சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த், பார்திவ் படேல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார்.

டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷ்ரமா (துணைக் கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், யுவேந்திர சஹல், வாஷிங்டன் சுந்தர், க்ருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான 4 நாள் ஆட்டத்துக்கான இந்திய ஏ அணியின் விவரம் பின்வருமாறு:

அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), முரளி விஜய், பிருத்வி ஷா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, பார்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), கே.கௌதம், ஷபாஸ் நதீம், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, தீபக் சஹர், ஆர்.குர்பானி, விஜய் ஷங்கர், கே.எஸ்.பரத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com