துளிகள்...

துளிகள்...



ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு சனிக்கிழமை மும்பையில் நடக்கிறது. கேப்டன் கோலியின் ஆட்டசுமை, மிடில் ஆர்டர் பலவீனம் குறித்து தேர்வாளர்கள் ஆலோசனை மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

புடாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி செளத்ரி 57 கிலோ பிரிவில் குரோஷியாவின் நிக்கோலினாவை வீழ்த்தி தங்கம் வென்றார். அனாமிகா 51 கிலோ, மணிஷா 64 கிலோ ஆகியோர் வெள்ளி வென்றனர்.

ஆசியப் போட்டியில் 100 மீ, 200 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற டுட்டி சந்த் கடுமையாக போராடி வென்றதால் 100 மீ வெள்ளியே தனக்கு சிறப்பானதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். நூலிழையில் தங்கத்தை தவற விட்டேன் என்றார்.

இந்தியன் சூப்பர் கால்பந்து லீக் (ஐஎஸ்எல்) 2018-19 சீசனுக்கு தில்லி டைனமோஸ் அணி அட்ரியோ கார்மோனா, பிரதீப் மோகன்ராஜ், ஸ்வர்லூன் உள்ளிட்ட அயல்நாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எஃப் சி அணி பாலஸ்தீன பார்வர்ட் வீரர் கார்லோஸ் சலோமை ஒப்பந்தம் செய்துள்ளது. பெங்களூரு எஃப்சி அணி ஸ்பெயின் டிபண்டர் ஆல்பர்ட் செர்ரனை ஒப்பந்தம் செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com