ஐசிசி ஒருநாள் தரவரிசை பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வாய்ப்பு

ஐசிசி ஒருநாள் ஆட்ட பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது.
ஐசிசி ஒருநாள் தரவரிசை பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வாய்ப்பு


ஐசிசி ஒருநாள் ஆட்ட பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. ஐசிசி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தற்போது முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிப்பது பெருமை தரும் விஷயமாகும். முன்னணி வீரர்களுடன் விளையாட உள்ளோம். அங்குள்ள ஆட்ட சூழல் சவாலாக இருக்கும் என்பதை அறிவேன் என்றார்.
பும்ரா தனக்கு அடுத்துள்ள ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை காட்டிலும் 20 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளார். குல்தீப் யாதவ் 6, சஹால் 9 ஆகியோரும் தங்கள் நிலைகளை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளனர். 
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் ஆசிய கோப்பையில் பங்கேற்காத நிலையில் பாகிஸ்தான் வீரர் பாபர் தனது நிலையை உயர்த்திக் கொள்ள முற்படுவார். 
அவர் கூறுகையில்: கோலி என்னை விட அதிக புள்ளிகள் பெற்றுள்ளார். எனினும் இப்போட்டியின் மூலம் எனது இரண்டாம் நிலையை நான் தக்க வைத்துக் கொள்வேன் என்றார்.
ரோஹித் சர்மா 4, ஷிகர் தவன் 9, தமிம் இக்பால் வங்கதேசம் 12-ஆவது இடங்களில் உள்ளனர். அடுத்த ஆண்டு 2019 மே மாதம் இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் வீரர்களுக்கு ஆசிய கோப்பை போட்டி முக்கிய களமாக உள்ளது.
ஒரு நாள் அணிகள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 5-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com