டெஸ்ட் தொடர் தோல்வியால் பெரியளவு மாற்றங்கள் எதுவும் தேவையில்லை

இங்கிலாந்துடன் ஏற்பட்ட டெஸ்ட் தொடர் தோல்வியால் பெரியளவு மாற்றங்கள் எதுவும் தேவையில்லை என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
டெஸ்ட் தொடர் தோல்வியால் பெரியளவு மாற்றங்கள் எதுவும் தேவையில்லை


இங்கிலாந்துடன் ஏற்பட்ட டெஸ்ட் தொடர் தோல்வியால் பெரியளவு மாற்றங்கள் எதுவும் தேவையில்லை என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 4-1 என வலுகுறைந்த இங்கிலாந்திடம் இழந்தது படுதோல்வியை சந்தித்தது இந்தியா. இந்நிலையில் இதுதொடர்பாக கேப்டன் கோலி கூறியதாவது:
எதனால் தொடரை இழந்தோம் என்பதை நாங்கள் அறிவோம். எனினும் அணியில் பெரியளவு மாற்றங்கள் ஏதும் செய்யத் தேவையில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் சில நேரங்களில் நமது கை ஓங்கியிருக்கும் சூழல் வருகிறது. அப்போது நாம் சரியாக ஆடுகிறோம் என எண்ணம் எழுகிறது.
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட தொடர் தோல்வி இந்திய அணியின் அன்னிய நாட்டு சுற்றுப் பயணத்தை கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. 
அணியின் பல்வேறு பலவீனங்கள் வெளிப்பட்டுள்ளது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
நாம் நமது பலத்தின் அடிப்படையில் விளையாட வில்லை. எதிரணிக்கு நாம் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினோம். ஆனால் அதை தக்க வைக்க முடியவில்லை. ஆனால் இங்கிலாந்து அணி சூழ்நிலைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டது. 
கடந்த 15 ஆண்டுளில் இருந்த அணிகளிலேயே இந்த அணி தான் சிறந்தது என பயிற்சியாளர் சாஸ்திரி கூறியது குறித்து கோலி கூறுகையில், 
நாம் இதை நம்ப வேண்டும். இது உண்மைதான், ஏன் அவ்வாறு இருத்தல் கூடாது.
இந்த தொடரில் நாம் கடும் போராட்டத்தை ஏற்படுத்தினோம். எதிரணியைக் காட்டிலும் நமக்கு சாதகமாக விளங்கிய சூழல்களை நாம் பயன்படுத்தவில்லை. தொடரை வெல்வதே நமது நோக்கமாக இருந்தது. கடைசி டெஸ்டில் இரண்டாம் இன்னிங்ஸில் பெளலர் தட்டுப்பாடு இருந்த நிலையில், பேட்ஸ்மேன்கள் கை கொடுத்தனர். நாம் பல வெற்றிகளை தொடர்ந்து பெற்றால், பல்வேறு தவறுகள் மறைக்கப்பட்டு விடும். நான் எனது ஆட்டத்தை அந்த அடிப்படையில் தான் விளையாடினேன்.
ராகுல்-பந்த் ஆட்டத்தால் டிராவில் முடிவடையும் என எதிர்பார்த்தோம். அவர்களது 204 ரன்கள் சேர்க்கையை பார்த்தபோது, வெற்றி பெறலாம் என நம்பிக்கை ஏற்பட்டது. இருவரும் தங்கள் ஆட்டத்தை நிரூபித்துள்ளனர். இந்த தொடரில் பல்வேறு பாடங்களை நாங்கள் கற்றுள்ளோம். அதன் அடிப்படையில் அணியை கட்டமைப்போம்.
பெளலர்களும் தங்கள் கடமையை சிறப்பாக செய்தனர். அவர்களால் தான் நாம் இந்தளவுக்கு ஆட முடிந்தது. பேட்ஸ்மேன்கள் ஆட்டம் குறித்து விவாதிக்கப்படும்.
அடுத்த டெஸ்ட் தொடரில் துவக்கம் முதலே அதிக கவனத்துடன் ஆடுவோம் என்றார்.
இந்த தொடரில் அதிக ரன்களை கோலி அடித்தார். ஆண்டர்சனுடன் மோதல் ஏற்பட்டது குறித்து கேட்டபோது, அது வெறும் தமாஷுக்காக என்றார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், மோசமாக எதுவும் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com