டேவிஸ் கோப்பை: செர்பியாவுக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் இந்தியா தோல்வி!

முதல் நாளன்று விளையாடிய இரு ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் தோல்வியடைந்துள்ளார்கள்...
டேவிஸ் கோப்பை: செர்பியாவுக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் இந்தியா தோல்வி!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச் இல்லாத செர்பிய அணியுடன் இந்திய அணி மோதிவருகிறது. இந்நிலையில் முதல் நாளன்று விளையாடிய இரு ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் தோல்வியடைந்துள்ளார்கள். 

டேவிஸ் கோப்பை உலக தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி செர்பியாவின் கிரால்ஜெவோவில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் விளையாடி வருகிறது. யுஎஸ் ஓபன் சாம்பியன் ஜோகோவிச் டேவிஸ் கோப்பை போட்டிக்கான செர்பிய அணியில் இடம்பெறவில்லை.

முதல் ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன்-லாஸ்லோ ஜெரேவை எதிர்கொண்டார். இதில் ராம்குமார்,  6-3 4-6 6-7(2) 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் பிரஜேனேஷ் குணேஸ்வரன் செர்பியாவின் முதல்நிலை வீரர் துஸான் லஜோவிக்குடன் மோதினார்.  4-6 3-6 4-6 என நேர் செட்களில் பிரஜேனேஷ் தோல்வியடைந்ததால் செர்பிய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 

இன்று நடைபெறும் இரட்டையர் போட்டியில் ரோஹன் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி இணை-நிக்கோலோ-டேனிலோ இணையுடன் மோதுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார் லஜோவிக்கையும், பிரஜ்னேஷ் ஜெரேவையும் எதிர்கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com