பாகிஸ்தான் அபார வெற்றி

ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அபார வெற்றி

ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
 இதற்கிடையே புதிதாக ஒருநாள் அந்தஸ்து பெற்ற ஹாங்காங் மற்றும் பலம் வாய்நத் பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒரு நாள் ஆட்டம்
 ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹாங்காங் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் அனுபவம் குறைந்த அந்த அணி வீரர்கள் பாகிஸ்தான் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். சீரான இடைவெளியில் ஹாங்காங் அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்ததன.
 இறுதியில் 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 116 ரன்களை மட்டுமே ஹாங்காங் எடுத்தது.
 அந்த அணியில் அய்ஸாஸ் கான் 27, கின்சிட் ஷா 26, அன்ஷுமன் ரத் 19, நிஸாகட் கான் 13 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் உஸ்மான் கான் 3-19, ஹாசன் அலி 2-19, ஷதப் கான் 2-31, பாஹிம் 1-10 விக்கெட்டை வீழ்த்தினர்.
 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாக். தரப்பில் இமாம் உல் ஹக், பாக்கர் ஸமான் களமிறங்கினர்.
 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் 24 ரன்கள் எடுத்த ஸமான் ஆட்டமிழந்து வெளியேறினார். 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 33 ரன்களை எடுத்த பாபர் ஆஸம் ஈஷான் பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது 21 ஓவர்களில் பாக். அணி 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்களை எடுத்திருந்தது.
 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 67 பந்துகளில் இமாம் உல் ஹக் 50 ரன்களுடனும், ஷோயிப் மாலிக் 9 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 23.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்து பாக். அணி வென்றது.
 ஹாங்காங் அணி தரப்பில் ஈஷான் கான் 2-34 விக்கெட்டை வீழ்த்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com