ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ராகுல் ரங்கசாமிக்கு வளர்ந்து வரும் வீரர் விருது

சென்னையின் ராகுல் ரங்கசாமிக்கு இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் வளர்ந்து வரும் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:21 am IST


சென்னையின் ராகுல் ரங்கசாமிக்கு இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் வளர்ந்து வரும் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் ஆண்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் ராகுல் ரங்கசாமி வளர்ந்து வரும் மோட்டார் வாகன பந்தய வீரர் என்ற விருதைப் பெற்றார். 
அவர் 4 தேசிய பட்டங்கள், எம்ஆர்எப் எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தயத்திலும் வென்று கெளதம் சிங்கானியா கோப்பையும் வென்றார்.
சர்வதேச சங்கத் தலைவர் ஜி டாட் விருதுகளை வழங்கினார். மோட்டார் வாகன பந்தய சங்க முன்னாள் தலைவர் ஜிஆர்.கார்த்திகேயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மோட்டார் கார்பந்தய வீரர்கள் கெளரவ் கில், ஆர்மன் இப்ராஹிம், அமித் ரஜித் கோஷ், அஷ்வின் நாயக், வீராங்கனைகள் மிரா எர்டா, ஸ்னேகா, ஷிரியா லோஹியா உள்ளிட்டோரும் கெளரவிக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.