ஆசிய ஏர்கன் சாம்பியன் போட்டி: இந்தியாவுக்கு 2 தங்கம்
By DIN | Published On : 01st April 2019 12:36 AM | Last Updated : 01st April 2019 12:36 AM | அ+அ அ- |

தைவானில் நடைபெற்று வரும் ஆசிய ஏர்கன் சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10 மீ ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் மகளிர் பிரிவில் இளவேனில் வளரிவன் 250.5 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவர் பிரிவில் 17 வயதான திவ்யான்ஷிங் பன்வாரும் 249.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.
அணிகள் பிரிவில் இளவேனில், அபூர்வி, மேக்னா ஆகியோர் அடங்கிய அணி 1878.6 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது.
இப்போட்டியில் இதுவரை 12 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.