2019 உலகக் கோப்பைக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு!
By எழில் | Published on : 03rd April 2019 12:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது நியூஸிலாந்து அணி.
கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுக வீரரான டாம் பிளண்டெல்லும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
நியூஸிலாந்து அணி
கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், ராஸ் டெய்லர், டாம் லதம், காலின் மன்றோ, டாம் பிளண்டெல், ஜிம்மி நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் செளதி, மேட் ஹென்றி, லாக்கி ஃபர்குசன், டிரெண்ட் போல்ட்.