வெற்றி மகிழ்ச்சியில் ஆர்செனல் வீரர்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் ஆர்செனல் வீரர்கள்.

ப்ரீமியர் லீக்: ஆர்செனல் வெற்றி

இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் ஆர்செனல் அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.

இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் ஆர்செனல் அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.
லண்டனில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நியூகேஸ்ட்ல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஆர்செனல். இதன் மூலம் டாட்டன்ஹாம் அணியை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. 
சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. ஆரோன் ராம்சே, அலெக்சாண்டர் லாகேசெட் ஆர்செனல் அணியின் கோல்களை அடித்தனர். 
கடந்த 2017-க்கு பின் ஆர்செனல் மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com