உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ஏப்ரல் 15-ல் அறிவிப்பு!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ஏப்ரல் 15-ல் அறிவிப்பு!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணி வரும் ஏப்ரல் 15 அன்று தேர்வு செய்யப்படும்  என பிசிசிஐ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நியுஸிலாந்து கிரிக்கெட் வாரியம், உலகக் கோப்பைக்கான நியூஸிலாந்து அணியை அறிவித்தது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஒருநாள் கேப்டன் அஸ்கர் ஆப்கனைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. அவருக்குப் பதிலாக குல்பாதின் நைப் ஒருநாள் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணித் தேர்வு அடுத்த வாரம் ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்படவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள தேர்வுக்குழுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

ஏப்ரல் 23-க்கு முன்பு, அணிகள் வீரர்களின் பட்டியலின் வெளியிடவேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஏழு நாள்களுக்கு முன்புவரை அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம். அதற்குப் பிறகு ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால் உலகக் கோப்பைத் தொழில்நுட்பக் குழுவின் அனுமதி பெறவேண்டும். 

உலகக் கோப்பைக்கான இந்திய அணி எவ்வாறு அமையும் என இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் கூறினார். அவர் இதுகுறித்துக் கூறியதாவது: இந்திய உலகக் கோப்பை அணி ஏறக்குறைய உறுதியாகி விட்டது. குறிப்பாக ஒன்றிரண்டு இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. இதில் கேப்டன் கோலியின் விருப்பத்துக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை தரும். இங்கிலாந்தில் நிலவும் சூழலைப் பொறுத்து, அந்த இடத்தில் எவரை ஆடச் செய்வது என முடிவு செய்யப்படும். கூடுதலாக தேவைப்படும் வீரர் தொடர்பாக தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் தீர்மானிப்பர். கூடுதலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் , தொடக்க வீரர், வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர் தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு கோடையில் இங்கிலாந்தில் நாங்கள் ஆடிய போது, வறண்ட வானிலை காணப்பட்டது. வரும் கோடைக்காலத்திலும் இதை நிலை இருக்கும் எனத் தெரியவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் வீரர்களின் ஆட்டத்திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும். ஐபிஎல் ஆட்டத்திறன்படி கூடாது. 20 ஓவர்கள் ஆட்டம் அடிப்படையில் 50 ஓவர்கள் அணியை தேர்வு செய்ய முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com