சுடச்சுட

  

  ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை:  இந்திய அணி இன்று அறிவிப்பு

  By DIN  |   Published on : 15th April 2019 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  icc

  ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 போட்டிக்கான இந்திய அணி திங்கள்கிழமை பிசிசிஐயால் அறிவிக்கப்படுகிறது. அணியில் கேள்விக்குறியாக உள்ள 4-ஆம் நிலை பேட்ஸ்மேன் இடத்தில் யார் இடம் பெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
   இந்நிலையில் இந்திய அணியை பிசிசிஐ தேர்வாளர் குழு திங்கள்கிழமை அறிவிக்கிறது. முதலில் தேர்வாளர் குழுத் தலைவர் எம்எஸ்கே.பிரசாத், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அணி அறிவிக்கப்படும்.
   தொடக்க வரிசையில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. மூன்றாம் நிலையில் கேப்டன் விராட் கோலி ஆடுவார்.
   இந்திய அணியில் 4-ஆம் நிலை பேட்ஸ்மேன் சிக்கலாக அமைந்துள்ளது. அம்பதி ராயுடு கண்டிப்பாக இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸி. நியூஸி தொடரில் ராயுடு சோபிக்கவில்லை. ராயுடுவுக்கு போட்டியாக ரஹானே, ஷிரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஆகியோர் வரிசையில் உள்ளனர்.
   ரிஷப் பந்தை சேர்க்க ஆலோசனை: இதற்கிடையே ரிஷப்பந்த்தை நான்காம் நிலையில் களமிறக்க கங்குலி ஆலோசனை கூறியுள்ளார். சேதேஸ்வர் புஜாராவையும் இடம் பெறச் செய்யலாம் எனக் கூறியுள்ளனர். எனினும் ராயுடுவே 4-ஆம் நிலையில் ஆட சரியான நபர் என்ற கருத்து வலுவாக உள்ளது. மிடில் ஆர்டரில் கேதார் ஜாதவ், தோனி உள்ளிட்டோரும் இடம் பெறுகின்றனர். ஆல்ரவுண்டர் பட்டியலில் விஜய் சங்கர், ஹார்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். 3 ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டால் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெறலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் இடத்துக்கு பும்ரா, புவனேஸ்வர்குமார், ஷமி ஆகியோர் எளிதில் இடம் பெறுவர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், சஹல் சேர்க்கப்படுவர். நான்காவது வேகப்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டால் நவ்தீப் சைனி, தீபக் சஹார், இஷாந்த் சர்மா ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
   உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, லோகேஷ் ராகுல், தோனி, கேதார் ஜாதவ், ரிஷப் பந்த், அம்பதி ராயுடு,ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸஸ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ், சஹல்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai