ஐபிஎல் டி20: பெங்களூருவை வீழ்த்தியது மும்பை அணி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
ஐபிஎல் டி20: பெங்களூருவை வீழ்த்தியது மும்பை அணி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணியின் சராசரி ஸ்கோர் 192 ஆகும். அதனால், இந்த போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  பெங்களூரு அணியில் வழக்கம் போல் கேப்டன் விராட் கோலி மற்றும் பார்த்தீவ் படேல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

அந்த அணிக்கு சரியான தொடக்கம் அமையவில்லை. கோலி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வழக்கம் போல் துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்த்தீவ் படேல் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு டி வில்லியர்ஸ், மொயீன் அலி ஜோடி விக்கெட்டை பாதுகாத்து விளையாடுவதில் கவனமாக இருந்தனர். எனினும், அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் வேகத்தை ஓவருக்கு 7-இல் கடைபிடித்து வந்தனர். இதையடுத்து, 13-ஆவது ஓவரில் இருந்து சற்று அதிரடிக்கு மாறினர். குறிப்பாக மொயீன் அலி சிக்ஸர்களாக அடித்து அதிரடி காட்டினார்.  பெஹரன்டோர்ஃப் வீசிய 16-ஆவது ஓவரில் மொயீன் அலி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார். 

இந்த ஓவர் பெங்களூருவுக்கு நேர்மறையாக மாறியது. இதைத்தொடர்ந்து, டி வில்லியர்ஸும் 41 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்தார். அதே ஓவரில் மொயீன் அலியும் தனது 32-ஆவது பந்தில் அரைசதத்தை அடித்தார். 18-ஆவது ஓவரை வீசிய மலிங்கா முதல் பந்தில் மொயீன் அலியை வீழ்த்தினார். மொயீன் அலி 32 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 50 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸையும் மலிங்கா வீழ்த்தினார். எனினும், டி வில்லியர்ஸ் அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்ததால் கொஞ்சம் ரன் கிடைத்தது. அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால் ஃபினிஷிங் பொறுப்பை ஏற்று டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார். பூம்ராவின் 19-ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி, மலிங்காவின் கடைசி ஓவரில் 1 சிக்ஸர் அடித்தார். 

அதேசமயம் அவர் கடைசி ஓவரின் 2-ஆவது பந்தில் ரன் அவுட் ஆனார். அவர் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 75 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு, கடைசி 4 பந்தில் மலிங்கா வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. பின்னர் 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com