சுடச்சுட

  
  kohli_lords123

  பல பின்னடைவுகள் ஏற்பட்டாலும் முன்னேறுவோம் என பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
   மொஹாலியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாபை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு தனது முதல் வெற்றியை பெற்றது.
   இதுதொடர்பாக கோலி கூறியதாவது: தற்போது தான் அனைத்தும் ஒருசீராக நடந்து வருகிறது. சில ஆட்டங்களில் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை.
   மேலும் ஏனைய ஆட்டங்களில் நாங்கள் சரிவர ஆடவில்லை. பல பின்னடைவுகள் ஏற்பட்டாலும், வெற்றிபெறுவதற்கான தாகம் எங்கள் அணிக்கு குறையவில்லை என்றார்.
   நாங்கள் இப்போது தான் கணக்கை தொடங்கியுள்ளோம். அடுத்து வரும் ஆட்டங்களையும் கண்டிப்பாக வெல்ல வேண்டும் . அடுத்து மும்பையுடன் ஆட உள்ளோம் என டிவில்லியர்ஸ் கூறினார்.
   பஞ்சாப் கேப்டன் அஸ்வின்: மைதானத்தில் எங்கள் அணி ஒழுங்கற்ற வகையில் ஆடினர். கேட்ச்களை தவறவிட்டு, மோசமான பீல்டிங்கும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் வறட்சியாக இருந்தது. ஆனால் நாங்கள் பந்துவீசும் போது பனி பெய்தது.
   சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியும், பெங்களூரு அணி சிறப்பாக ஆடினர். அடுத்த ஆட்டங்களில் தவறாமல் வெற்றி பெற வேண்டும் என்றார்.
   ரூ.12 லட்சம் அபராதம்
   கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மெதுவாக ஓவர் வீசியதற்காக பெங்களூரு கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
   ஐபிஎல் அமைப்பு விதிகளின்படி இதற்காக கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai