சென்னை அபார வெற்றி

கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
சென்னை அபார வெற்றி

கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
 இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 டாஸ் வென்ற சென்னை பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா தரப்பில் கிறிஸ்லீன்-சுனில் நரைன் களமிறங்கினர். கிறிஸ் லீன் ஒருமுனையில் அதிரடியாக ஆடிய நிலையில் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. சுனில் நரைன் 2, நிதீஷ் ராணா 21 ரன்களுடன் அவுட்டாகினர்.
 பின்னர் வந்த ராபின் உத்தப்பா கோல்டன் டக்கானார். அவருக்கு பின் வந்த அதிரடி வீரர் ரஸ்ஸல் முதன்முறையாக 10 ரன்களுடன் துரிதமாக அவுட்டாகி வெளியேறினார்.
 கிறிஸ் லீன் 82: 6 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 82 ரன்களை விளாசிய கிறிஸ் லீன், தாஹிர் பந்துவீச்சில் அவுட்டானார். 35 பநதுகளில் தனது 8-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார் லீன்.
 பின்னர் தினேஷ் கார்த்திக் 18, ஷுப்மன் கில் 15, குல்தீப் யாதவ் 0 என அவுட்டாகி வெளியேறினர். பியுஷ் சாவ்லா 4 ரன்களோடு அவுட்டாகாமல் இருந்தார்.
 இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது கொல்கத்தா.
 இம்ரான் தாஹிர் அபாரம் 4 விக்கெட்: சென்னை தரப்பில் இம்ரான் தாஹிர் அபாரமாக பந்துவீசி 27 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 4 விக்கெட்டை சாய்த்தார். சர்துல் தாகுர் 2-18, சான்ட்நர் 1-30 விக்கெட்டை வீழ்த்தினர்.
 161 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை அணி தரப்பில் ஷேன் வாட்சன், டூ பிளெஸிஸ் களமிறங்கினர். இதில் டூபிளெஸிஸ் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினார். இதனால் ஸ்கோர் 3 ஓவர்களில் 29-ஐ கடந்தது.
 இதற்கிடையே வாட்சன் 6 ரன்களுடன் வெளியேறினார். டூபிளெஸிஸ் 5 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் நரைன் பந்தில் போல்டானார். ராயுடுவும் நீண்ட நேரம் நிலைக்காமல் 5 ரன்களுக்கு வெளியேறினார்.
 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கேதார் ஜாதவ் 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 20 ரன்களை எடுத்த நிலையில், சாவ்லா பந்தில் எல்பிடபிள்யு ஆனார். அவருக்கு பின் தோனியும் 16 ரன்களுக்கு நரைன் பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.
 ரெய்னா 36-ஆவது அரைசதம்: சிறப்பாக ஆடிய சுரேஷ் ரெய்னா தனது 36-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.
 ஜடேஜாவும்-ரெய்னாவும் இணைந்து அபாரமாக ஆடி சென்னையை வெற்றி பெறச்செய்தனர். ஹாரி குர்னேயின் 19-ஆவது ஓவரில் 15 ரன்களை விளாசினார் ஜடேஜா. இறுதியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வென்றது சென்னை.
 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 58 ரன்களுடன் ரெய்னாவும், 5 பவுண்டரியுடன் 31 ரன்களுடன் ஜடேஜாவும் அவுட்டாகாமல் இருந்தனர்.
 கொல்கத்தா தரப்பில் சாவ்லா 2-32, நரைன் 2-19, குர்னே 1-37 விக்கெட்டை வீழ்த்தினர்.
 சென்னைக்கு 14 புள்ளிகள்: இந்த வெற்றியுடன் சென்னை மொத்தம் 7 வெற்றி, 1 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
 சுருக்கமான ஸ்கோர்:
 கொல்கத்தா

 20 ஓவர்களில் 161/8
 கிறிஸ் லீன் 82,
 பந்துவீச்சு: இம்ரான் தாஹிர் 4-27.
 சென்னை
 19.4 ஓவர்களில் 162/5
 சுரேஷ் ரெய்னா 58,
 பந்துவீச்சு: சுனில் நரைன் 2-19.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com