மும்பையை வெல்ல பெங்களூரு முனைப்பு?

முதல் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அடுத்த ஆட்டத்தில் மும்பையை வெல்லும் முனைப்போடு உள்ளது பெங்களூரு.

முதல் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அடுத்த ஆட்டத்தில் மும்பையை வெல்லும் முனைப்போடு உள்ளது பெங்களூரு.
 இரு அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடக்கிறது, தொடர்ந்து 6 தோல்விகளை சந்தித்த பெங்களூரு சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாபை வென்றது. கோலி-டிவில்லியர்ஸின் அபார ஆட்டத்தில் வெற்றி வசமானது. எனினும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலேயே உள்ளது பெங்களூரு.
 மெதுவான பந்துவீச்சுக்கு உதவும் மும்பை பிட்சில் பெங்களூரு வீரர் சஹல் மாயாஜாலம் நிகழ்த்தலாம். அவரது பந்துவீச்சு மும்பையின் வலிமையான பேட்டிங்குக்கு சவாலை ஏற்படுத்துவார் எனத் தெரிகிறது.
 ராஜஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட மும்பை, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என போராடும். ரோஹித், டி காக், ஹார்திக் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். பெங்களூர்-மும்பை இடையிலான ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com