சுடச்சுட

  

  உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்

  By Raghavendran  |   Published on : 16th April 2019 04:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dinesh_karthik

   

  உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது தனது கனவாக இருந்ததாக நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 2019 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் நீண்ட கால இடைவேளைக்குப் பின் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் (33) இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

  உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது எனது கனவாக இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது. இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணி சமீபகாலங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் நானும் இந்திய அணியில் இருப்பது பெருமையாக உள்ளது. இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்றே நான் எப்போதும் விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார்.

  முன்னதாக, தோனிக்கு காயம் ஏற்பட்டால் மாற்று விக்கெட் கீப்பராக யாரை களமிறக்குவது என்ற மிகப்பெரிய வாதம் அணித் தேர்வில் நடந்தது. அப்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. காலிறுதி அல்லது அரையிறுதி போன்ற முக்கிய ஆட்டங்களின் போது விக்கெட் கீப்பிங் முக்கிய பங்காக அமையும். எனவே இதில் ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட தேர்வான நிலையில்,  அனுபவ அடிப்படையில் நாங்கள் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம் என்று தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

  கடந்த 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai