மும்பை அபார வெற்றி

பெங்களூரை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை.
மும்பை அபார வெற்றி

பெங்களூரை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை.
 முதலில் ஆடிய பெங்களூரு 171/7 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை 172/5 ரன்களை எடுத்து வென்றது.
 இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பவுலிங்கை தேர்வு செய்தது.
 பெங்களூரு தரப்பில் களமிறங்கிய பார்த்திவ் பட்டேல் அதிரடியாக ஆடி 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 28 ரன்களை எடுத்து அவுட்டானார். கேப்டன் கோலி 8 ரன்களுக்கு பெஹ்ரண்டர்ப் பந்தில் வெளியேறினார்.
 டி வில்லியர்ஸ்-மொயின் அலி அதிரடி: பின்னர் டிவில்லியர்ஸ்-மொயின் அலி இணை மும்பை பந்துவீச்சை பதம் பார்த்தது. மொயின் அலி தனது 2-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்தார். 5 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 50 ரன்களுடன் வெளியேறினார் அவர். மார்கஸ் ஸ்டாய்னிஸ் மலிங்கா பந்து வீச்சில் டக் அவுட்டானார்.
 டி வில்லியர்ஸ் 32-ஆவது அரைசதம்: மறுமுனையில் அபாரமாக ஆடிய டி வில்லியர்ஸ் தனது 32-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். 4 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 75 ரன்களை விளாசிய அவரை பொல்லார்ட் ரன் அவுட் செய்தார். அவருக்கு பின் அக்ஷதீப்நாத் 2, பவன் நேகி 0 என மலிங்கா பந்துவீச்சில் வெளியேறினர்.
 இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது பெங்களூரு.
 மலிங்கா அபாரம் 4 விக்கெட்: மும்பை தரப்பில் லசித் மலிங்கா அபாரமாக பந்துவீசி 4-31 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 மும்பை வெற்றி: 172 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ரோஹித்-டி காக் இணை தொடக்கம் முதலே பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தது. இதனால் 6-ஆவது ஓவர் முடிவில் ஸ்கோர் 67-ஐ கடந்தது. தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் 28 ரன்களுடன் ரோஹித்தும், 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 40 பந்துகளை எடுத்த டி காக்கும் மொயின் அலி பந்துவீச்சில் அவுட்டாயினர்.
 பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் 29, இஷான் கிஷான் 21 ரன்களை குவித்து ஸ்கோர் சீராக உயர வகை செய்து சஹல் பந்துவீச்சில் அவுட்டாயினர். க்ருணால் பாண்டியா 11 ரன்களுடன் சிராஜ் பந்தில் வெளியேறினார்.
 ஹார்திக் பாண்டியா அதிரடி: ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 37 ரன்களை விளாசி அவுட்டாகாமல் வெற்றிக்கு வித்திட்டார்.
 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து வென்றது மும்பை.
 பெங்களூரு தரப்பில் சஹல் 2-27, மொயின் அலி 2-18 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com