சுடச்சுட

  
  RAYU

  உலகக் கோப்பை போட்டியை காண 3 டி கண்ணாடியை வாங்க உள்ளேன் என இந்திய அணியில் சேர்க்கப்படாத அம்பதி ராயுடு வேதனையுடன் கூறியுள்ளார்.
   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அம்பதி ராயுடு, உலகக் கோப்பை இந்திய அணியில் நான்காம் நிலை பேட்ஸ்மேனாக கட்டாயம் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது.
   ராயுடுவுக்கு பதில், விஜய் சங்கர் சேர்க்கப்பட்டது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத் கூறுகையில் இங்கிலாந்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று அம்சங்கள் (3 டி) முறையில் விஜய் சங்கரை பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் அம்பதி ராயுடு தனது சுட்டுரை பக்கத்தில் (டுவிட்டர்) கூறியதாவது: உலகக் கோப்பை போட்டியைக் காண 3 டி கண்ணாடிக்கு ஆர்டர் தந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai