சுடச்சுட

  

  *டி20யில் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும், தோனி நிதானமாக செயல்பட்டு, ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் கவர்ந்துள்ளது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடி வரும் நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஐஷ் சோதி.
  *உலகக் கோப்பை ஆஸி. அணியில் வார்னர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது, தொடக்க வரிசையில் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மூன்று தொடக்க வீரர்களும் சிறந்த பார்மில் உள்ளது வரவேற்கத்தக்க சிக்கல் என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.
  *பல்வேறு வீரர்களின காயத்தால் உலகக் கோப்பைக்கான அணியை அறிவிப்பதில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் சிக்கலுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பேட்ஸ்மேன் மொஸாதேக் ஹுசைன், இதுவரைஅறியப்படாத வேகப்பந்து வீச்சாளர் அபு ஜாவேத் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  *ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு மிகவும் வலுவான இந்திய அணியை தேர்வுக் குழு அறிவித்துள்ளது என நட்சத்திர வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு சென்று போட்டியில் பங்கேற்று சிறப்பாக ஆட வேண்டும் என்ற உத்வேகத்தில் உள்ளோம் என்றார்.
  *சாலையோர சிறுவர்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதுவராக கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  *சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) புரோ லீக் போட்டியில் வரும் 2020-ஆம் ஆண்டு முதல் இந்திய ஆடவர் அணி கலந்து கொள்ளும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai