சுடச்சுட

    
    RAHUL_MILLER

    ராஜஸ்தான் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப். முதலில் ஆடிய பஞ்சாப் 182/6 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
     இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மொஹாலியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது.
     இதையடுத்து பஞ்சாப் தரப்பில் கிறிஸ் கெயில், ராகுல் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய கெயில் 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 30 ரன்களுடனும், அவருக்கு பின் வந்த மயங்க் அகர்வால் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 26 ரன்களுக்கும் அவுட்டாகினர்.
     ராகுல்-மில்லர் ரன் குவிப்பு: லோகேஷ் ராகுல்-டேவிட் மில்லர் இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 52 ரன்களை விளாசிய ராகுல், உனதிகட் பந்துவீச்சில் அவுட்டானார். தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் 27 பந்துகளில் 40 ரன்களை விளாசிய மில்லர், குல்கர்னி பந்துவீச்சில் வெளியேறினார். அவர்களுக்கு பின் வந்த நிக்கோலஸ் பூரன் 5, மந்தீப் சிங் 0 என வெளியேறினர்.
     கேப்டன் அஸ்வின் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 17 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை சேர்த்தது பஞ்சாப்.
     ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்: ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 3-15 விக்கெட்டுகளையும், குல்கர்னி, உனதிகட், சோதி தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர். ராகுல் இந்த ஆட்டத்தில் தனது 14-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.
     183 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் 23, சஞ்சு சாம்சன் 27, ரஹானே 26, ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
     ராகுல் திரிபாதி 50 ரன்களுடன் தனது 4-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.
     கோல்டன் டக்: அஷ்டன் டர்னர், ஷிரேயஸ் கோபால் ஆகியோல் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினர். ஸ்டுவர்ட் பின்னி இறுதியில் 3 சிக்ஸர், 1பவுண்டரியுடன் போராடி 33 ரன்களை விளாசினார்.
     20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் 170 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் அஸ்வின் 2-24 விக்கெட்டை வீழ்த்தினார்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai