சுடச்சுட

  

  பிளே ஆஃப் சுற்றில் நுழைய சென்னை மும்முரம்: இன்று ஹைதராபாதுடன் மோதல்

  By DIN  |   Published on : 17th April 2019 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஐபிஎல் 2019 சீசனின் பிளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக நுழைய நடப்பு சாம்பியன் சென்னை மும்முரமாக உள்ளது. சன்ரைசர்ஸ் அணியுடன் புதன்கிழமை ஹைதராபாதில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை மோதவுள்ளது.
   பட்டியலில் 14 புள்ளிகளுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் 6 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் 6-ôவது இடத்தில் உள்ளது.
   சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி தலைமையில் வலுவான அணியாக உருவெடுத்துள்ளது. எதிரணிகளை அவற்றின் சொந்த மைதானங்களிலேயே வீழ்த்தி வருகிறது.
   அம்பதி ராயுடு சோகம்: சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அம்பதி ராயுடு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக விஜய்சங்கர் சேர்க்கப்பட்டார். இது சென்னை அணி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் தன்னை மீண்டும் நிரூபிக்க ராயுடு முயல்வார். சென்னை அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் வலுவாக உள்ளதால் எந்த நிர்பந்தமும் இன்றி களமிறங்கும்.
   மேலும் தோனி தனது வீரர்களை வெவ்வேறு நிலைகளில் களமிறக்கி சோதித்துள்ளார். அவரது செயல்பாட்டுக்கு உதவியாக ஹர்பஜன், இம்ரான் தாஹிர் உள்ளனர்.
   ஹைதராபாதுக்கு சோதனை: ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் அபாரமாக ஆடி வென்ற சன்ரைசர்ஸ், தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. தொடக்க வீரர்களான வார்னர்-பேர்ஸ்டோவ் சோபிக்காவிட்டால், ஒட்டுமொத்த அணியும் சொதப்பி விடுகின்றனர். அந்த அணியில் மிடில் ஆர்டர் சிக்கலில் உள்ளது. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் தான் ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் நீடிக்க முடியும் என்ற நிலை காணப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai