சுட்டுரையில் கருத்து தெரிவித்த அம்பதி ராயுடுவுக்கு எதிராக நடவடிக்கை இல்லை: பிசிசிஐ

உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணியில் சேர்க்கப்படாததால் வேதனையுடன் சுட்டுரையில் கருத்து தெரிவித்த அம்பதி ராயுடுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எண்ணமில்லை என்று பிசிசிஐ தெரிவித்தது.
சுட்டுரையில் கருத்து தெரிவித்த அம்பதி ராயுடுவுக்கு எதிராக நடவடிக்கை இல்லை: பிசிசிஐ


உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணியில் சேர்க்கப்படாததால் வேதனையுடன் சுட்டுரையில் கருத்து தெரிவித்த அம்பதி ராயுடுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எண்ணமில்லை என்று பிசிசிஐ தெரிவித்தது.
ஆல் ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதால், அம்பதி ராயுடுவால் உலகக் கோப்பைக்கான 
இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.  பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் (3 டைமன்ஷன் திறமை) ஆகிய மூன்றை அடிப்படையாக வைத்து விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்று தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார்.
தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த அம்பதி ராயுடு, உலகக் கோப்பை போட்டியைக் காண 3டி கண்ணாடியை வாங்கவுள்ளேன் என்று வேடிக்கையாகவும், அதே நேரம் வேதனையுடன் சுட்டுரையில் பதிவு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அந்தப் பதிவுக்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இல்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் அதிகாரி தில்லியில் புதன்கிழமை கூறியதாவது:
அம்பதி ராயுடு சுட்டுரையில் பதிவு வெளியிட்டிருந்தது எங்களின் கவனத்துக்கு வந்தது. இதுபோன்ற சூழலில் உணர்வுகளை சிலரால் கட்டுப்படுத்த முடியாது. அதனால், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் யாருக்காவது எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டால் அம்பதி ராயுடு அணியில் இடம்பெற நிச்சயமாக வாய்ப்புள்ளது. ரிஷப் பந்த், அம்பதி ராயுடு, நவ்தீப் சைனி ஆகிய 3 வீரர்களும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் காயமடைந்தால் அவர்களுக்கு பதிலாக களமிறக்கப்படவுள்ளனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com