இரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் 1979: சாம்பியன் மே.இ.தீவுகள்

முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய நிலையில் நான்காண்டுகள் கழித்து 1979-இல் ஜூன் 9 முதல் 23-ஆம் தேதி வரை
உலகக் கோப்பையுடன் மே.இ.தீவு வீரர்கள்.
உலகக் கோப்பையுடன் மே.இ.தீவு வீரர்கள்.

முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய நிலையில் நான்காண்டுகள் கழித்து 1979-இல் ஜூன் 9 முதல் 23-ஆம் தேதி வரை இரண்டாவது உலகக் கோப்பை போட்டியை இங்கிலாந்தே நடத்தியது. இதுவும் புருடென்ஷியல் கோப்பை என்றே அழைக்கப்பட்டது. 
முதல் போட்டியைப் போலவே 8 அணிகள் இடம் பெற்றன. 4 அணிகள் கொண்ட 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு, முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதிலும் 60 ஓவர் முறையே பின்பற்றப்பட்டது.  மே.இ.தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, கனடா, இலங்கை அணிகள் பங்கேற்றன. 
முதல் உலகக் கோப்பையில் பங்கேற்ற கிழக்கு ஆப்பிரிக்க அணி கலந்து கொள்ளவில்லை. லண்டன், ஓவல், மான்செஸ்டர், பர்மிங்ஹாம், நாட்டிங்ஹாம், லீட்ஸ் உள்ளிட்ட 6 இடங்களில் போட்டி நடைபெற்றது.

இந்தியா மோதிய ஆட்டங்கள்
மே.இ.தீவுகள், நியூஸிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகளிடம் தோல்வியை தழுவியது.
 மே.இ.தீவுகளிடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நியூஸிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்திலும், இலங்கையிடம் 47 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது.
அரையிறுதியில் இங்கிலாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தையும் (இங்கிலாந்து (221/8, நியூஸிலாந்து 212/9), மே.இ.தீவுகள் 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் (மே.இ.தீவுகள் 293/6, பாகிஸ்தான் 250) வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தன.

இறுதிச் சுற்று
இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகளும், போட்டியை நடத்திய இங்கிலாந்தும் மோதின. 
மே.இ.தீவுகள் 286/9, இங்கிலாந்து 194) என 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இரண்டாம் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மே.இ.தீவுகள். 99/4 என திணறிக் கொண்டிருந்த மே.இ.தீவுகள் அணியை விவியன் ரிச்சர்ட்ஸ் 138 அற்புதமாக சதமடித்து மீட்டார். 
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் அதன் தொடக்க வீரர்கள் மைக் பிரையலி 64, ஜெப் பாய்காட் 57 இருவரும் டெஸ்ட் ஆட்டத்தில் ஆடுவது போல் நிதானமாக ரன்களை சேகரித்தனர். 38 ஓவர்களில் 129 ரன்களையே சேகரித்தனர். 

11 ரன்களுக்கு 8 விக்கெட் வீழ்ச்சி
கிரஹாம் கூச் 32 அவுட்டானவுடன் உலகக் கோப்பை வரலாற்றிலேயே ஏற்படாத விக்கெட் வீழ்ச்சியை இங்கிலாந்து சந்தித்தது. 11 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. 
அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் மே.இ.தீவுகள் கார்டன் கிரீனிட்ஜ் 253, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் மைக் ஹென்ட்ரிக் (இங்கிலாந்து) 10 விக்கெட்டுகள் என்ற சிறப்பை பெற்றனர்.

இந்தியா அதிர்ச்சி தோல்வி
வலுகுறைந்த அணியான இலங்கை லீக் சுற்றில் எதிர்கொண்டது இந்தியா. இதில் இலங்கை 238/5 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com