தில்லி சரண்டர்: பாண்டியா சகோதரர்கள் விளாசல்

தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி அபாரமாக ஆடி 40 ரன்களுடன் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை 168/5 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய தில்லி 128/9 ரன்களை எடுத்துதோல்வியைத் தழுவியது.
அபாரமாக ஆடிய பாண்டியா சகோதரர்கள்.
அபாரமாக ஆடிய பாண்டியா சகோதரர்கள்.


தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி அபாரமாக ஆடி 40 ரன்களுடன் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை 168/5 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய தில்லி 128/9 ரன்களை எடுத்துதோல்வியைத் தழுவியது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. 
அமித் மிஸ்ரா 150-ஆவது விக்கெட்: கேப்டன் ரோஹித்-குயிண்டன் டி  காக் களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடினர். 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் ரோஹித் சர்மா, அமித் மிஸ்ரா பந்தில் போல்டானார்.  ரோஹித்தை அவுட் செய்ததின் மூலம் மிஸ்ரா தனது 150-ஆவது ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்திய சிறப்பை பெற்றார்.
தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் டிகாக் 35 ரன்கள் எடுத்திருந் போது,ரன் அவுட்டானார். பென் கட்டிங் 2 ரன்களோடு அக்ஸர் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். அப்போது 9.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களை எடுத்திருந்தது மும்பை. 
அதன்பின் சூரியகுமார் யாதவ் 26 ரன்களுடன் ரபாடா பந்துவீச்சில் வெளியேறினார். 
பாண்டியா சகோதரர்கள் அதிரடி: ஹார்திக் பாண்டியா-க்ருணால் பாண்டியா சகோதரர்கள் இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு அதிரடியாக ஆடி ரன்களை சேகரித்தனர். தலா 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 15 பந்துகளில் 32 ரன்களை விளாசிய ஹார்திக் ரபாடா பந்துவீச்சில் அவுட்டானார். 5 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 37 ரன்களுடன் க்ருணால்பாண்டியா அவுட்டாகாமல் இருந்தார். தில்லி தரப்பில் ரபாடா 2-38, அமித் மிஸ்ரா, அக்ஸர் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.
169 ரன்கள் வெற்றி இலக்குடன் தில்லி தரப்பில் களமிறங்கிய பிரித்வி ஷா-ஷிகர் தவன் தொடக்கம் முதலே மும்பை பந்துவீச்சை பதம் பார்த்தனர். 7-ஆவது ஓவரின் போது 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 35 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த தவனை, போல்டாக்கினார் ராகுல் சஹார். அவருக்கு பின் பிரித்வி ஷா 20 ரன்களுடனும், கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 3 ரன்களுடனும் சஹார் பந்தில் வெளியேறினர்.
காலின் மன்றோவை 3 ரன்களில் அவுட்டாக்கினார் க்ருணால் பாண்டியா. தொடக்க வரிசையின் அற்புத ஆட்டத்தை ஏனைய வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சரிந்த விக்கெட்டுகள்: அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தை 7 ரன்களுக்கு போல்டாக்கினார் பும்ரா.
கிறிஸ்மோரிஸை 11 ரன்களுக்கு மலிங்கா வெளியேற்றியநிலையில் . கீமா பால் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். ஒரளவு ஆடி 26 ரன்களை எடுத்திருந்த அக்ஸர் பட்டேலை போல்டாக்கினார் பும்ரா. ரபாடா 9 ரன்களுடன் பாண்டியா பந்தில் அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை மட்டுமே எடுத்து தில்லி தோல்வி அடைந்தது.
ராகுல் சஹார் அபாரம் 3 விக்கெட்: மும்பை அணி தரப்பில் ராகுல் சஹார் அற்புதமாக பந்துவீசி 3-19 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.

ரோஹித் 8000 டி20 ரன்கள்
ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் டி20 ஆட்டங்களில் 8000 ரன்களை குவித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். ஏற்கெனவே சுரேஷ் ரெய்னா, விராட் கோலி ஆகியோர் 8000 ரன்களை சேர்த்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com