சர்ச்சைப் பேச்சில் தீர்ப்பு: ராகுல், பாண்டியாவுக்கு விதிக்கப்பட்ட விநோத அபராதம்!

காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
சர்ச்சைப் பேச்சில் தீர்ப்பு: ராகுல், பாண்டியாவுக்கு விதிக்கப்பட்ட விநோத அபராதம்!

காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரினாலும், இந்திய அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இப்பிரச்னை குறித்து விசாரிக்க மத்தியஸ்தரை நியமிக்க உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ முறையிட்டது. அதுவரை 2 வீரர்கள் மீதான இடைநீக்க தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து மத்தியஸ்தர் டிகே. ஜெயின் சனிக்கிழமை உத்தரவிட்டார். 

இருவருமே இந்த அபராத தொகையில் பணியில் இருக்கும் போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த 10 பாதுகாப்புப் படையினரின் மனைவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பாரத் கீ வீர் ஆப்ஸ் மூலம் வழங்க வேண்டும். பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணியின் நிதிக் கணக்கில் தலா ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அடுத்த 4 வாரங்களுக்குள்ளாக இதை செய்யத் தவறினால், அவர்களின் ஊதியத்தில் இருந்து உரிய தொகையை பிசிசிஐ பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com