கடைசி கட்ட ஓவர்கள் பவுலிங் கவலை தருகிறது: ஷிரேயஸ் ஐயர்

எங்களது கடைசி கட்ட ஓவர்கள் பவுலிங் கவலை தருகிறது என தில்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஷிரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.
கடைசி கட்ட ஓவர்கள் பவுலிங் கவலை தருகிறது: ஷிரேயஸ் ஐயர்


எங்களது கடைசி கட்ட ஓவர்கள் பவுலிங் கவலை தருகிறது என தில்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஷிரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி தோல்வியுற்றது. 
இதுதொடர்பாக கேப்டன் ஷிரேயஸ் ஐயர் கூறியதாவது:
சொந்த மைதானத்தில் நடைபெறும் ஆட்டங்களில் வெற்றி பெறுவது எங்களுக்கு முக்கியமானது. இதுபோன்ற பிட்ச்களில் வெல்ல வேண்டும். டாஸை இழந்த நிலையில் மும்பை எங்களை அனைத்து துறைகளிலும் மிஞ்சி விட்டனர். இந்த வெற்றி மும்பைக்கு உரியது. கடைசி கட்ட ஓவர்களில் எங்கள் பவுலிங் கவலை தருகிறது. கடைசி 18 பந்துகளில் 51 ரன்களை அளித்தோம். வெளி மைதானங்களில் நடைபெற்ற ஆட்டங்களில் நன்றாக சேஸ் செய்தோம். கூடுதலாக 20 ரன்களை வழங்கியதால் தோல்வி ஏற்பட்டது என்றார் ஐயர்.
ரோஹித் சர்மா: நாங்கள் அடித்த 168 ரன்கள் நல்ல ஸ்கோர் என்பதை நம்பினோம். குறிப்பாக எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்துவீசினர். முதல் 2 ஓவர்கள் ஆடிய போது, 140 ரன்களே நல்ல ஸ்கோர் எனக் கருதினோம். அதிர்ஷ்டவசமாக எங்கள் கையில் விக்கெட்டுகள் இருந்தன. இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹார் தில்லியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி விட்டார். ஹார்திக் பாண்டியா அனைத்து ஷாட்களையும் சிறப்பாக கையாண்டார் என்றார் ரோஹித்.
ஹார்திக் பாண்டியா: அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என எனக்கு நானே கூறிக் கொண்டேன். வலைப்பயிற்சியை கடுமையாக கடைபிடித்து வருகிறேன். கடைசி ஓவர்களில் ரன்களை குவிக்கும் உத்வேகத்துடன் ஆடி வருகிறேன். எங்களுக்கு இன்னும் 5 ஆட்டங்கள், பிளே ஆஃப் உள்ளன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com