மும்பையை வென்றே தீரவேண்டிய நிலையில் ராஜஸ்தான்

வலுவான மும்பை அணியை வென்றே தீரவேண்டிய நிலையில் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் .
மும்பையை வென்றே தீரவேண்டிய நிலையில் ராஜஸ்தான்


வலுவான மும்பை அணியை வென்றே தீரவேண்டிய நிலையில் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் .
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. மும்பை அணி தொடர் வெற்றியோடு 2-ஆவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 6 தோல்வி, 2 வெற்றிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது.
முந்தைய ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான். தற்போது 2-ஆவது முறையாக சந்திக்கிறது. சொந்த மைதானத்தில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற ராஜஸ்தான்,  3 தோல்விகளை சந்தித்தது.
ஜோஸ் பட்லரைத் தவிர ஏனைய பேட்ஸ்மேன்கள் எவரும் சோபிக்கவில்லை. பந்துவீச்சிலும் ஜோப்ரா ஆர்ச்சர், ஷிரேயஸ் கோபால் மட்டுமே ஜொலிக்கின்றனர்.
அதே நேரத்தில் மும்பை அணி பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் வலுவாக உள்ளது. இரு அணிகளும் 22 முறை மோதியதில் மும்பை 11 முறையும், ராஜஸ்தான் 10 முறையும் வென்றன. ஒரு ஆட்டம் 2009-இல் மழையால் கைவிடப்பட்டது.
உள்ளூரில் வெல்ல தில்லி தீவிரம்: தொடர் தோல்விகளால் துவண்டுள்ள தில்லி சனிக்கிழமை இரவு பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. 5 வெற்றி, 4 தோல்வியுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது தில்லியும் 4-ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதுவதால் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிக்கி பாண்டிங், செளரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்கள் பயிற்சி அளித்தும் தில்லி திணறி வருகிறது. ரிஷப் பந்த், ஷிரேயஸ் ஐயர், பிரித்வி ஷா ஷிகர் தவன் ஆகியோர் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் பஞ்சாப் அணி முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய நம்பிக்கையோடு பங்கேற்கிறது. கெயில், ராகுல், ஷமி, மில்லர், அஸ்வின் போன்றோர் அணியை தாங்கி நிறுத்துகின்றனர். பிளே ஆஃப் சுற்றில் நுழைய இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலையில் இரு அணிகளும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com