சுடச்சுட

  

  ஆசிய குத்துச்சண்டை போட்டி: காலிறுதியில் தீபக், லவ்லினா

  By DIN  |   Published on : 21st April 2019 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போரோகைன், மணிஷா மெüன், தீபக், ரோகித், ஆஷிஷ்குமார் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
  பாங்காக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிர் பிரிவு 69 கிலோ பிரிவில் லவ்லினா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வியட்னாமின் டிரான் லின்னை வென்றார். 54 கிலோ பிரிவில் மணிஷா மெüன் காலிறுதிக்கு முன்னேறினார்.
  48 கிலோ பிரிவில் நிது மட்டுமே தோல்வியுற்று வெளியேறினார்.
  ஆடவர் 49 கிலோ பிரிவில் தேசிய சாம்பியன் தீபக் 5-0 என இலங்கையின் முட்டுநாகாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
  60 கிலோ பிரிவில் ஷிவ் தாப்பா 4-1 என்ற புள்ளிக்கணக்கில் கொரியாவின் கிம் வொன்ஹோவை வீழ்த்தினார்.
  அதே போல் 75 கிலோ பிரிவில் ஆசிஷ் குமார், 64 கிலோ பிரிவில் ரோகித் டோகாஸ், 56 கிலோ பிரிவில் கவிந்தர் சிங் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai